கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார்’. படம் வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. தொடர்ந்து வசூல் சாதனையை செய்து வரும் இப்படம் தற்போது வரை 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.
தற்போது சலார் திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதியே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சலார் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டுமே 160 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.