சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி வந்தவர் சஞ்சய். அங்குள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், தன்னுடன் படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது காதலியை சந்திப்பதற்கு, அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, காதலியின் தாய் வந்ததால், அச்சம் அடைந்த சஞ்சய், 50 மாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்தார்.
இதில், படுகாயம் அடைந்த அந்த இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.