பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு, சமீபத்தில் சில மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக, படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதை கூட, அவர் தவிர்த்து வந்தார்.
மேலும், தனது பாதுகாப்பு கருதி ஃபுல்லட் ப்ருஃப் வாகனத்தையும் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், மீண்டும் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, மகாராஷ்டிராவின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் எண்ணுக்கு, செய்தி ஒன்று வந்துள்ளது.
அந்த செய்தியில், நடிகர் சல்மான் கானை, அவரது இல்லத்திலேயே வைத்து கொன்றுவிட்டு, காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.