தென்னிந்தியாவில் எடுக்கப்படும் பல்வேறு திரைப்படங்கள், இந்தியா முழுவதும் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றன. ஆனால், இந்தியில் வெளியாகும் படங்கள், தென்னிந்தியாவில் வெற்றியை பெறுவதில்லை.
இவ்வாறு இருக்க, இந்தி திரைப்படங்கள் தென்னிந்தியாவில் வெற்றி பெறாமல் இருப்பது குறித்து, பிரபல நடிகர் ஒருவர் பேசியுள்ளார். அதாவது, பாலிவுட் நடிகர் சல்மான் கான், சிக்கந்தர் படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது பேசும்போது, தென்னிந்தியர்களை திரையரங்குகளை நோக்கி இழுப்பது, மிகவும் சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும், தென்னிந்திய சினிமா தனித்துவமானது என்றும், அதில் கலாச்சாரத்துடனான இணைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார். அதனால் தான், பாலிவுட் படங்கள், தென்னிந்தியாவில் வெற்றியை பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.