நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து, இருவரும் திருமணமே செய்துக் கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது நாக சைத்தன்யாவுக்கும், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள், நாக சைத்தன்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.