“எவன் எவகூட டேட்டிங் செஞ்சா எனக்கென்ன” – நாக சைதன்யா தொடர்பான பேச்சு! சமந்தா புதிய விளக்கம்!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2021-ஆம் ஆண்டு அன்று, விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, இருவரும் தங்களது பணிகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது, சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக, பல்வேறு நேர்காணல்களில் கலந்துக் கொண்டு வருகிறார். இதில், குறிப்பிட்ட நேர்காணல் ஒன்றில், நாக சைத்தன்யா நடிகை ஒருவருடன் டேட்டிங் செல்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு, “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன.. நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், அது துக்கத்தில் தான் கடைசியில் முடியும்” என்று அவர் பதில் அளித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சில செய்திகளில் வருவதைப் போன்று நான் சொல்லவே இல்லை” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News