தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர், சிட்டாடல் என்ற வெப் தொடரில், சமீபத்தில் நடித்திருந்தார். ராஜ் அன்ட் டீகே இயக்கியிருந்த இந்த வெப் தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், ராஜ் அண்ட் டீகே-வின் இயக்கத்தில், மீண்டும் சமந்தா இணைந்துள்ளார். அதாவது, ரக்ட் பிரம்மாண்ட் என்ற புதிய வெப் தொரை, ராஜ் அன்ட் டீகே இயக்கி வருகின்றனர்.
இந்த தொடரில், சமந்தா நடித்து வந்த நிலையில், சிறிய இடைவேளை எடுத்திருந்தார். தற்போது, இடைவேளை முடிந்துவிட்டதால், மீண்டும் படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார்.