நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2021-ஆம் ஆண்டு பிரிந்தார். தற்போது, பிரபல இயக்குநர் ஒருவருடன், அவர் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில, நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவரின் நினைவாக இருந்த விஷயத்தை நீக்கியுள்ளார். அதாவது, இருவரும் ஒன்றாக வாழ்ந்தபோது, தங்களது கைகளில் ஒரே மாதிரியான வகையில் பச்சைக் குத்தியிருந்தனர்.
விவாகரத்திற்கு பிறகும், சமந்தா அந்த டேட்டூவை நீக்காமலே இருந்து வந்துள்ளார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள சமந்தாவின் புகைப்படத்தில், அந்த டேட்டூ நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
