நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து, நாக சைத்தன்யா சோபிதா துலிபாலா என்ற பாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், சமந்தா எந்தவொரு உறவிலும் ஈடுபடாமலே இருந்து வந்தார். இவ்வாறு இருக்க, பிக்கில் பால் விளையாடும் சென்னை அணி ஒன்றை விலைக்கு வாங்கிய சமந்தா, அந்த அணிக்காக புரமோஷன் செய்து வந்தார். இந்த விளையாட்டு போட்டிக்கான தொடர் ஒன்று, தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
இந்த தொடரின் இறுதி ஆட்டம், கடந்த 4-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை காண சமந்தா வந்தபோது,அவருடன் ராஜ் நிடிமோர் என்ற இயக்குநருடன் வந்துள்ளார். அப்போது, இருவரும் கைகோர்த்தபடி இருந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சமந்தா காதலில் விழுந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து அந்த இயக்குநரோ? சமந்தாவோ எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.