மீண்டும் இணையும் சமந்தா-நாக சைத்தன்யா?

நடிகை சமந்தாவிற்கும், நாக சைத்தன்யாவிற்கும், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று விவாகரத்தானது. இதையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், சமந்தாவிற்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரை சந்திக்க நாக சைத்தன்யா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுடைய விவாகரத்தை ரத்து செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதன்காரணமாக, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.