ரிஸ்க் எடுக்கும் சமந்தா – பணம் மிஞ்சுமா?

தமிழ் சினிமாவின் தரமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இளம் தலைமுறையின் எண்ணங்களை கலைப் படைப்புகளாக வெளியிடுவதற்காக தான், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், அர்த்தமுள்ள, உண்மையான, உலக அளவிலான கதைகளை சொல்வதற்காகவும் இந்த தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

இத்தனை நாட்கள், நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறியிருப்பதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், தயாரிப்பாளர் பணி ரிஸ்க் நிறைந்தது என்பதால், சிலர் அவருக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News