நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்த சிட்டாடல் என்ற ஆங்கில வெப் தொடர், கடந்த ஆண்டு, அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த தொடர் அதே பெயரில், இந்தி மொழியில் எடுக்கப்பட்டு வருகிறது.
பிரியங்கா சோப்ரா நடித்த கதாபாத்திரத்தில், நடிகை சமந்தா நடிக்க உள்ளார். பேமிலி மேன், பார்ஸி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கிய ராஜ் அன்ட் டிகே தான் இந்த தொடரையும் இயக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடரின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் வருண் தவான், பிரபல இயக்குநர் கரன் ஜோகர் காலில் விழுந்தார்.
அதற்கு, கரன் ஜோகரும், ஆசிர்வாதம் வழங்கினார். ஆனால், நடிகை சமந்தா, அவரது காலில் விழுந்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
வருண் தவானுக்கு மட்டும் ஆசிர்வாதம் செய்த ஜோகர், சமந்தாவை புறக்கணித்தது ஏன் என்று, நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.