நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சகுந்தலம். இவருக்கு இணையாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ள இதில், அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குணா டீம்ஸ் ஒர்க்ஸ் தயாரித்துள்ள சகுந்தலம் படம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. புராண காவியத்தை மையமாக கொண்டுள்ள படத்தின், ட்ரைலர் வெளியாகி எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் குணசேகர், படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா என்று கூறி புகழ்ந்து தள்ளினார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட சமந்தா மேடையிலே கண்ணீர் விட்டு அழுதார். மேலும் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமாந்தா, நீண்ட இடைவெளிக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.