தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, விவாகரத்து செய்திருந்தார்.
இதையடுத்து, தனது கரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், விரைவில் 2-வது திருமணம் செய்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகை சமந்தா, தொண்டு நிறுவனத்தின் மூலம், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், சமந்தாவுக்கு, வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், அவர் இரண்டாம் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என்றும், கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.