நடிகை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு அன்று காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு, தன்னுடைய சினிமா பயணத்தில் கவனம் செலுத்திய சமந்தா, பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பெற்றோரின் அழுத்தம் காரணமாக, சமந்தா 2-வது திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நெருங்கிய உறவினரின் மகனைத் தான், சமந்தா 2-வது திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.