Connect with us

Raj News Tamil

மலேசியாவில் சாமி தரிசனம் செய்த நயன் – விக்கி ! அடுத்த டார்கெட் என்ன ?

சினிமா

மலேசியாவில் சாமி தரிசனம் செய்த நயன் – விக்கி ! அடுத்த டார்கெட் என்ன ?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதுதவிர விளம்பரங்களிலும் நடித்து வருமானம் ஈட்டுகிறார் . வேறு சில தொழில்களிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினர். .இதனைத்தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய கையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு பறந்துள்ளனர். புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்காக சென்ற அவர்கள், அங்குள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் நயன்தாரா முன்பை விட சுறுசுறுப்பாக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top