குதிரை பயிற்சி.. சாகசங்களுக்கு தயார் ஆன தனுஷ் பட நடிகை!

தனுஷ் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த திரைப்படம் வாத்தி. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சம்யுக்தா மேனன்.

இவர் தற்போது சுயம்பு என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். வரலாற்று கதையாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகிறது.

இதனை டூப் இல்லாமல் செய்வதற்காக, சம்யுக்தா மேனன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News