பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சம்யுக்தா.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் காரணமாக, குத்துக்கு பத்து, வாரிசு ஆகிய திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், இவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
அதாவது, இவருடைய கணவர் கார்த்திக் என்பவர், வேறொரு பெண்ணுடன், 4 வருடங்களாக, கள்ளகாதலில் இருந்ததாக கூறியுள்ளார்.
இதனை அறிந்த பிறகு, தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இவரது வாழ்க்கையில் இவ்வளவு கொடுமையா? என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.