லிங்குசாமி இயக்கத்தில், விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் சண்டக்கோழி 2. இந்த திரைப்படத்தின் உருவாக்க பணியின்போது, விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுந்தானது.
இந்த ஒப்பந்தத்தில், ரூ. 23 கோடியே 21 லட்சத்திற்கு, சண்டக்கோழி 2 படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் திரையரங்க மற்றும் சேட்டிலைட் உரிமைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த பணத்திற்கான 12 சதவீத ஜி.எஸ்.டி தொகையை லைகா நிறுவனம் செலுத்ததால், அதனை நடிகர் விஷாலே செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தான் செலுத்திய ஜி.எஸ்.டி தொகையை, வட்டியுடன் சேர்த்து தனக்கு அளிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை, மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கோரி, லைகா நிறுவனம் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
லைகாவின் மனுவை விசாரித்த நீதிபதி, மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து,வழக்கை முடித்துவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.