Connect with us

Raj News Tamil

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சாண்டி மாஸ்டர்!

சினிமா

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சாண்டி மாஸ்டர்!

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு, தனது பயணத்தை தொடங்கியவர் சாண்டி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பல்வேறு நடன நிகழ்ச்சிகளில், டேன்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

தற்போது, சினிமாவிலும் களமிறங்கிய இவர், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களில், தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சில திரைப்படங்களில், அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, விஜயின் லியோ படத்தில், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகவும், சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், சாண்டி மாஸ்டர் குறித்து, சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நேரம், பிரேமம், கோல்டு ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படம், அவருக்கு திருப்புமுனையாக அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top