பரத் நடிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் காளிதாஸ். நல்ல கதையம்சத்துடன் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த திரைப்படம் வெளியாகி, 5 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இதன் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில், நடிகர் பரத், அபர்ணதி, பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மேலும், தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சங்கீதாவும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு, சங்கீதா தமிழ் சினிமாவில் நடிப்பது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.