எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு, விஜயின் பூவே உனக்காக படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு, பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர், சரவணன் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துக் கொண்டு, சினிமாவில் இருந்து விலகினார்.
இதையடுத்து, 14 வருடங்கள் கழித்து, நகரவர்த்தி நடுவில் நான் என்ற மலையாளப் படத்தில், கம்பேக் கொடுத்தார். ஆனால், அந்த திரைப்படம் வெற்றி பெறாததால், மீண்டும் சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு சவோர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று, வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட சங்கீதா, “இனிமேல் தொடர்ந்து நடிப்பேன்” என்று உறுதி அளித்தார்.