சங்கீதா – ரெடின் கிங்ஸ்லி வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..

கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படத்திற்கு பிறகு, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர், அண்ணாத்த, ஏ 1 என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கும், சீரியல் நடிகை சங்கீதா என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில், தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News