அரசு அலுவலக அறையில் தூய்மை பணியாளர் தற்கொலை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரை சேர்ந்தவர் பாபு (38). இவர் பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்த பாபு வழக்கம் போல நேற்று காலை தூய்மை பணிக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் பாபு பழனி காந்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

பாபு தூக்கில் தொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த நகராட்சி அலுவலக காவலாளி உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகராட்சி தூய்மை பணியாளரான பாபு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News