Connect with us

Raj News Tamil

குணா படத்தை இயக்கியது இவர் கிடையாதா? உண்மையான இயக்குநர் யார்?

சினிமா

குணா படத்தை இயக்கியது இவர் கிடையாதா? உண்மையான இயக்குநர் யார்?

சந்தான பாரதி இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் குணா.

கடந்த 1991-ஆம் ஆண்டு அன்று, திரையரங்குகளில் வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு, கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குணா படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு என்பவர், பிரபல மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி கிடையாது என்றும், எப்போதாவது ஒருநாள் தான், படத்தின் ஷீட்டிங்கிற்கு அவர் வருவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், குணா படத்தை முழுக்க முழுக்க இயக்கியது கமல் ஹாசன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கமல் ஹாசன் நடிக்கும் படங்களை, வேறு இயக்குநர்கள் இயக்கினாலும், அதில் கமல் ஹாசனுக்கு உண்டான திரையாக்கம் தெரியும்.

குறிப்பாக, தேவர் மகன், குருதிப்புணல், அன்பே சிவம், குணா உள்ளிட்ட படங்களில், அது மிகவும் வெளிப்படையாகவே தெரியும். இதுதொடர்பாக ரசிகர்களும் அவ்வப்போது கூறுவதுண்டு. ஆனால், இந்த முறை, படத்தின் ஒளிப்பதிவாளரே நேரடியாக உண்மையை போட்டுடைத்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top