தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய இவர், அதன்பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல ஹீரோவின் படத்தில், சந்தானம் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிம்புவின் 49-வது படத்தை, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறதாம். இந்த திரைப்படத்தில் தான், சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், காமெடியனாக நடிக்கிறாரா? அல்லது 2-வது ஹீரோவாக நடிக்கிறாரா? என்பது குறித்து, இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.