சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், வரும் 28-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
ரிலீசுக்கு குறுகிய காலங்களே இருப்பதால், படத்தை புரமோஷன் செய்யும் பணியில், படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் விடுதியில், நடிகர் சந்தானம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், மது அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற காட்சிகளை சினிமாவில் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பல்வேறு படங்களில் மது அருந்துவது போல் நடித்துவிட்டு, தற்போது ஊருக்கு உபதேசம் சொல்கிறாரே என்று சந்தானத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.