சந்தானம் நடிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில், ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் வரும் மே 16-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து, நடிகர் சந்தானம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், “இந்த திரைப்படத்தில், எனக்கு அம்மாவாக நடிப்பதற்கு நடிகை கஸ்தூரியிடம் கேட்டிருந்தோம். அம்மா கதாபாத்திரம் என்று கூறியதும், அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். பின்னர், கதையை கேட்டதும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தில், கஸ்தூரியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.