தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சந்தானம். இவரது காமெடிக்காகவே வெற்றி பெற்ற படங்களும் உண்டு என்று சொல்லலாம். அந்த வரிசையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் அடங்கும்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர்யா, சந்தானம் மற்றும் நயன்தாரா தான் இதிலும் நடிப்பார்கள் என்று இவர் கூறியுள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து கொண்டிருக்கும் சந்தானம், இந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்ற கேள்வியும் நெட்டிசென்கள் மத்தியில் எழுந்துள்ளது.