மீண்டும் பாதாளத்திற்கு சென்ற சந்தானம்! ஜான் ஏறுனா முழம் சறுக்குது?

காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சந்தானம், தற்போது ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நல்ல வெற்றிப் படங்களை கொடுத்த இவர், சமீபகாலமாக தோல்வி படங்களாக கொடுத்து வந்தார்.

ஆனால், இவருக்கு லேட்டஸ்டாக வந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், வெற்றி அடைந்து, மார்கெட்டை தூக்கிக் கொடுத்தது. இனிமேல், சந்தானத்தின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என்று ரசிகர்களும் நினைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று சந்தானத்தின்ன கிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், படம் மிகவும் சுமாராக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி கூட, சிரிப்பை வரவழைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

ஜான் ஏறுனா முழம் சறுக்குது என்ற பழமொழி, சந்தானத்திற்கு இந்த சமயத்தில் பொறுத்தமாக இருக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது.

RELATED ARTICLES

Recent News