Connect with us

Raj News Tamil

கமல் ரசிகர் மன்றம்.. சந்தானத்தின் புதிய முயற்சி.. செம செய்தி..

சினிமா

கமல் ரசிகர் மன்றம்.. சந்தானத்தின் புதிய முயற்சி.. செம செய்தி..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய இவர், இன்றுவரை, ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதில், பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தழுவியிருந்தாலும், சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்டியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில், புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. பில்டப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், சந்தானம் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

மேலும், இப்படத்தில் சந்தானம் கமல் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்க, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top