பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் கிக். தன்யா ஹோப், தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள கிக் திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.