நடிகர் சந்தானம் நடித்திருந்த டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது.
யாரும் எதிர்பார்க்காத வகையில், பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், 16 கோடி ரூபாய் வரை தற்போது வசூலித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய சந்தானம் முடிவு செய்துள்ளார்.
அதாவது, இவரது நடிப்பில் கிக் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அடுத்த மாதம் வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.