“சரத்பாபு உயிரிழந்துவிட்டாரா?” – அதிர்ச்சி தகவல்!

நடிகரும், இயக்குநருமான மனோபாலா, உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், இரங்கல் தெரிவித்து வந்தனர். .

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவும், உயிரிழந்துவிட்டதாக, சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

இதனை அறிந்த நெட்டிசன்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் இரண்டு பிரபல நடிகர்கள் இறந்துவிட்டார்களே என்று வருத்தம் அடைந்தனர்.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான அறிவிப்பு, வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சரத்பாபுவின் சகோதரி, சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , “சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான செய்தி, வெறும் வதந்தி மட்டுமே. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலையில், தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில், அவரது உடல்நிலை சரியாக, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News