கடந்த 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத் குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரிய வம்சம்.
அந்த காலகட்டத்தில் இருந்து இன்றளவும் இப்படத்தின் தாக்கம் ,நட்சத்திர ஜன்னலில் என்ற பாடலின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என… pic.twitter.com/21WTB8X9Gz
— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2023
இந்நிலையில் , சரத்குமார் அவர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். சூரிய வம்சம் இன்றுடன் வெளியாகி 26 வருடங்கள் கடந்ததையடுத்து அதை நீங்காமல் மனதில் வைத்திருப்பதற்கு நன்றி எனவும் சூரிய வம்சம் 2 ஆம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.