பிரின்ஸை நடுங்கவிட்ட சர்தார் – நான்கு நாட்கள் வசூல் நிலவரம்!

இந்த வருட தீபாவளி தினத்தன்று, சர்தார், பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும், 47 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இதன்காரணமாக, இந்த திரைப்படத்தின் வசூல் பெருமளவில் அடிவாங்கியுள்ளது. முதல் நான்கு நாட்களில், வெறும் 32 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. எனவே, சர்தார் திரைப்படம் இந்த வருட தீபாவளி வின்னராக மாறியுள்ளது.