Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பாக்ஸ் ஆபிஃஸை அடித்து நொறுக்கிய சர்தார் வசூல்!

சினிமா

பாக்ஸ் ஆபிஃஸை அடித்து நொறுக்கிய சர்தார் வசூல்!

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் சர்தார். கார்த்தி நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும், தீபாவளி ரேசில் இந்த திரைப்படம் தான் வெற்றிப் பெற்றுள்ளது என்றும் ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படம் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் இரண்டு நாளில் மட்டும் 10 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. மேலும், வரும் விடுமுறை நாட்களில், இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top