சினிமா
சர்தார் இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? பெரிய லாபம் தான்!
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக இயக்கிய திரைப்படம் சர்தார். கடந்த தீபாவளி பண்டிகை அன்று வெளியான இந்த திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்பட்டது. குறிப்பாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், இந்த திரைப்படம் சக்கை போடு போட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது வரை, உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியே வசூல் சென்றுக்கொண்டிருந்தால், 100 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
