பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடைந்தது.
இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தை, கிட்டதட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுதான், ஆர்யாவின் வாழ்க்கையிலேயே மிகவும் பிரம்மாண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.