கபாலி, காலா ஆகிய திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றும், இதன்மூலம் பா.ரஞ்சித் திரைவாழ்க்கை அவ்வளவு தான் என்றும் பரபரப்பாக கூறப்பட்டது.
அந்த சமயத்தில் தான், சார்பட்ட பரம்பரை என்று திரைப்படம், 2021-ஆம் ஆண்டு அன்று, அமேசான் ப்ரைமில் வெளியானது. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்திலும், ஆர்யா தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். தங்கலான் படத்தை முடித்த பிறகு, இந்த படத்தை பா.ரஞ்சித் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.