எஸ்.ஜே.சூர்யாவின் இடத்தை பிடித்த சசிகுமார்?

எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன வெப் தொடர் வதந்தி. பெரும் அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை, இந்த வெப் தொடர் பெற்றிருந்தது.

இவ்வாறு இருக்க, இந்த வெப் தொடரின் 2-வது சீசனை துவங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறதாம். இந்நிலையில், இந்த வெப் தொடரின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த தொடரில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில், சசிகுமார் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், முதன்முறையாக வெப் தொடரில் சசிகுமார் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News