சுப்ரமணியபுரம் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு, ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்ததால், முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், வரும் மே 1-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக, ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், நீங்கள் மீண்டும் எப்போது திரைப்படம் இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் பீரியட் கதை ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன்.
இந்த படத்தில், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹீரோவாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பணிகள், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது” என்று கூறினார். இவரது இயக்கத்தில் படம் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு, இந்த பேட்டி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.