நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியை சந்தித்த சசிகுமார்!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு, நாடோடிகள், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு வெளியான திரைப்படங்கள், பெரும்பாலும் தோல்வியை சந்தித்தது. எனவே, பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்த சசிகுமாருக்கு, தற்போது நல்ல காலம் பிறந்து விட்டது.

அதாவது, இவரது நடிப்பில் இந்த வாரம் வெளியான அயாத்தி திரைப்படம், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மனிதத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சசிகுமாரின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் ஒன்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது.