“உங்க Wife கிட்ட கூட இப்படி செய்ய கூடாது” – பிரச்சனையில் சதீஷ்!

ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், தர்ஷா குப்தாவின் உடை குறித்து கிண்டல் செய்திருந்தார்.

அதாவது, சன்னி லியோன் புடவையில் அழகாக வந்துள்ளதாகவும், ஆனால், தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் வந்துள்ளதாகவும், கூறி, கிண்டலடித்திருந்தார்.

இதனால், பொங்கி எழுந்த சமூக ஆர்வலர்கள், கடும் கண்டனங்களை கூறி வந்தனர். இதுகுறித்து பதிவிட்ட இயக்குநர் நவீன், உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்று நீங்கள் சொன்னாலும் அது தவறு தான் என்று கண்டனம் தெரிவித்தார். இவ்வாறு கண்டனம் வலுத்ததால், இது தவறாக நடந்துவிட்டது என்று சதீஷ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.