Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“விஜய் படம் பண்ணப்போறேன்” – உதவி செய்த அஜித் பட தயாரிப்பாளர்! மகிழ்ச்சி அடைந்த வெங்கட் பிரபு!

சினிமா

“விஜய் படம் பண்ணப்போறேன்” – உதவி செய்த அஜித் பட தயாரிப்பாளர்! மகிழ்ச்சி அடைந்த வெங்கட் பிரபு!

சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு. இவர், தற்போது முதன்முறையாக தளபதி விஜயுடன், இணைந்து பணியாற்ற உள்ளார்.

இதுதொடர்பான பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் வாய்ப்பை, வெங்கட் பிரபு பெற்றதற்கு காரணமாக, அஜித் பட தயாரிப்பாளர் ஒருவர் இருந்ததாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது, இயக்குநர் வெங்கட் பிரபு, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தான் ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால், அந்த சமயத்தில் தான், விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதுகுறித்து தயாரிப்பாளரிடம் சொன்ன வெங்கட் பிரபு, “விஜய் படத்தை முடித்துவிட்டு, உங்களுடைய படத்தை இயக்கட்டுமா” என்று கேட்டுள்ளார்.

இதற்கு, சத்யஜோதி பிலிம்ஸின் உரிமையாளர் தியாகராஜனும், அனுமதி அளித்துள்ளார். இந்த தயாரிப்பாளர், அஜித்தை வைத்து, விவேகம், விஸ்வாசம் என்று இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top