இந்தியன் 2-வில் சத்யராஜ்-ஆ? கலக்கல் காம்பினேஷன்!

2.0 திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். கமல், சித்தார்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், கமலுக்கு வில்லனாக நடிப்பதற்கு, நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை, சம்பளமாக கேட்டுள்ளதால், தயாரிப்பு தரப்பினர் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஆனால், இந்த படத்தில் சத்யராஜ் கண்டிப்பாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரும், தயாரிப்பு தரப்பும் என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…