Connect with us

Raj News Tamil

பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சத்யராஜின் மகள்? தீயாக பரவும் தகவல்!

சினிமா

பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சத்யராஜின் மகள்? தீயாக பரவும் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது மகன் சிபிராஜ் சினிமாவிலும், இவரது மகள் திவ்யா மருத்துவத்துறையிலும் பிசியாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, சத்யராஜின் மகள் திவ்யா, மகிழ்மதி என்ற நிறுவனத்தின் மூலம், சத்துக்குறைபாடு உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

இதுமட்டுமின்றி, சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் குரல் கொடுக்கும் இவர், பாஜகவில் இணைய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

பாஜக தலைமை, இவரை தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்களுக்கு பதில் சொல்லும் வகையில், திவ்யா சத்யராஜ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உண்மை தான் என்றும், தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட கட்சி ஒன்று, தன்னை அணுகியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், மதத்தை போற்றும் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எந்த கட்சியில் இணைவேன் என்பதை, தேர்தல் முடிந்ததும் அறிவிப்பேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top