தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பைக் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
இவ்வாறு பைக் ஓட்டிக் கொண்டு, வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்யும்போது, பல்வேறு தரப்பு மக்களை பார்த்து, அவர்களுடன் பழகுவதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
இவ்வாறு இருக்க, பைக்கில் பயணம் மேற்கொண்டபோது, மதம் குறித்தும், மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பது குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித்தின் இந்த பேச்சுக்கு சத்யராஜ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ், “ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். அவருடன் எந்தவிதமான சண்டையும் இல்லை.
இருப்பினும் அவர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு காரணம் மதம் தான் என்று அஜித் அழகாக கூறியிருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.