Connect with us

Raj News Tamil

“நான் தான் மோடி.. மணிவண்ணன் தான் அமித்ஷா.. படத்துக்கு பெயர் சனாதனம்” – சத்யராஜ்

சினிமா

“நான் தான் மோடி.. மணிவண்ணன் தான் அமித்ஷா.. படத்துக்கு பெயர் சனாதனம்” – சத்யராஜ்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘இயக்குநர் மணிவன்னனும் நானும்‘ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மோடியாக நானும், அமித்ஷாவாக மணிவண்ணனும் நடிப்பதற்கு கதை ரெடியாக உள்ளது என்றும், இந்த படத்தின் தலைப்பு சனாதனம் என்றும் தெரிவித்தார்.

மேலும், குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதே, நான் மோடி போல் இருக்கிறேன் என்று, நண்பன் நிழல்கள் ரவி ஏற்கனவே என்னிடம் கூறினார் எனவும் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, இயக்குநர் மணிவண்ணன் உடனான நினைவுகள் குறித்து தொடர்ந்து பேசினார்.

More in சினிமா

To Top