டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் பணமோசடி தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2022ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் இந்த வழக்கில் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் திகார் சிறை குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அவரது முதுகு, இடது கால் மற்றும் தோள் பகுதியில் வலி உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு சிறை அதிகாரி கூறியுள்ளார்.